இலங்கை நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தித்வா புயலால் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் இருபத்தேழாம் நாள் தாக்கிய இந்த புயல், இலங்கையின் இருபத்தைந்து மாவட்டங்களில் இருபத்தி இரண்டு மாவட்டங்களை கடுமையாக பாதித்தது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் ஐநூற்று நாற்பது மில்லி மீட்டர் வரை மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலால் அறுநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், நூற்று எழுபத்து மூன்று பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட போக்குவரத்து வசதிகளை மீண்டும் கட்ட இரண்டு ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற பேரழிவுகளை தடுக்க புதிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தேவை என்று எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.