பான் இந்திய ஹிட்டான காந்தாரா சேப்டர் 1 படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ருக்மணி வசந்த், இயக்குனர் ஸ்ரீ கார்த்திக்கின் அடுத்த தமிழ் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். கானம் படத்தை இயக்கிய ஸ்ரீ கார்த்திக்கின் இந்த புதிய படத்தில் தாரா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.
ருக்மணி வசந்த் தாரா கதாபாத்திரத்தில் முதன்மை நாயகியாக நடிப்பார் என இயக்குனர் சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளார். தேவ் ராம்நாத், விநாயக் வைத்தியநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
வெள்ளை மின்னும் லெஹங்காவில் ருக்மணி வசந்த் சமீபத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தை கலக்கின. அவரது அழகும் நடிப்பும் தமிழ் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஒன்பது எபிசோடு கொண்ட டாக்கு டிராமா மூலம் கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.