Feed Item
·
Added article

ராமாயணம் பட விளம்பரத்திற்காக லண்டனில் இருக்கும் ரன்பீர் கபூர் பாலிவுட் என்ற பெயரை நிராகரித்துள்ளார். இந்திய சினிமாவை உலக அளவில் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புவதாக இன்று தெரிவித்தார்.

பிரிட்டிஷ் ஊடகமான ITV-க்கு அளித்த பேட்டியில், கலைக்கு எல்லை இல்லை என்றும், வேர்களை கொண்ட கலை தான் முக்கியம் என்றும் கூறினார். நவம்பர் 5-ம் தேதி ராமாயணம் வெளியாக உள்ள நிலையில் இந்த கருத்து பேசப்படுகிறது.

சாய் பல்லவி மற்றும் யாஷ் உடன் லண்டனில் புரோமோஷனில் ஈடுபட்டுள்ள ரன்பீர், கருப்பு ஜாக்கெட், நீல ஜீன்ஸ் என கேஷுவல் ஸ்டைலில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார்.

  • 92