தேவையான பொருட்கள் :
மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு - இவற்றை சம அளவு எடுத்துக் கொள்ளவும். அதாவது 10கிராம் என்றால் எல்லாப் பொருட்களும் 10 கிராம்.
அடுப்பைப் பற்ற வைத்து அடிகனமான ஒரு வாணலியை ஏற்றி அதை நன்கு சூடேற்றவும். அடுப்பைத் தணித்துக் கொள்ளவும்.(I.e. reduce the flame to the sim position).
மேலே குறிப்பிட்ட பொருட்களை ஒவ்வொன்றாகத் தனித்தனியாக 5 நிமிடங்கள் கைவிடாது வறுக்கவும்.
நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கண்ணாடி பாட்டிலில் அல்லது எவர்சில்வர் டப்பாவில் வைத்துக் கொள்ளவும். தயவுசெய்து எந்த மருந்தையும் பிளாஸ்டிக் டப்பாவில் வைக்க வேண்டாம்.
சாப்பிடும் முறை :
ஒரு டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அரைத்து வைத்துள்ள பொடியைப் போட்டு 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.
ஆறியதும் காலை மாலை வெறும் வயிற்றில் வடிகட்டாமல் அப்படியே அடியில் தங்கி இருக்கும் பொடியையும் சேர்த்துக் குடிக்கவும்.
குடித்து அரைமணி நேரம் கழித்துத் தான் வேறு எதையும் சாப்பிட அல்லது குடிக்க வேண்டும். இதை நினைவில் கொள்ளுங்கள்.
இதை அவர் சொல்லித் தொடர்ந்து சில மாதங்கள் சாப்பிட்டு நிறையப் பேருக்கு (எங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட) நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
எப்போதும் ஒன்றைத் தயவுசெய்து எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம் :
எல்லோருக்கும் எல்லாமும் ஒத்துக் கொள்ளாது. அதனால் சிறிதளவு முதலில் செய்து சாப்பிட்டுப் பார்த்து ஒத்துக் கொண்டால் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.. அல்லது நிறுத்தி விடுங்கள் . சிறிது காலம் கழித்து மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். இந்த விதி நீங்கள் எடுக்க நினைக்கும் எந்த கைப் பக்குவ.. சித்த.. ஆயுர்வேத மருந்துக்கும் பொருந்தும்.