Feed Item
·
Added a post

ஒரு வெற்றிகரமான மளிகை கடைக்காரர் இருந்தார் அவர் கடையில் எப்போதும் அமோக விற்பனை தான்.

சுமுகமாக வாழ்க்கை போய்கொண்டு இருந்தது .திடீரென அவர் கடைக்கு முன்னால் ஒரு பெரிய கட்டிடம் உருவாகத் தொடங்கியது .அங்கே ஒரு சூப்பர் மார்க்கெட் வரப்போவதாக தெரிவித்தார்கள். அது வந்தால் அவருடைய வியாபாரம் முற்றிலும் தடுத்துவிடும் .அவர் மிகவும் விரக்தி அடைந்தார் .

தன்னுடைய குருவிடம் சென்று மளிகை வியாபாரத்தைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது நான் இனி என்ன செய்வது என்றார்.

குரு அவரிடம் அந்த பல்பொருள் அங்காடியை நீ வெறுத்தால் அது உன் துன்பத்தில் முடியும் என்று குறிப்பிட்டார்.

அப்போது நான் என்ன செய்ய வேண்டும் .

தினமும் காலையில் கடைக்குள் நுழையும்போது உன் கடை வியாபாரம் செம்மையாக நடக்க வேண்டும் என்று வேண்டிகொள் எதிரே இருக்கும் பல்பொருள் அங்காடியும் சிறப்பாக நடக்க வேண்டும் என்று வாழ்த்து .

என்னுடைய போட்டியாளரை நான் வாழ்த்த வேண்டுமா ?

எந்த வாழ்த்தும் உன்னை வந்தடையும்... வெறுப்பு திரும்பி வந்து உன்னை அழிக்கும் என்று குரு முடித்துக்கொண்டார் .

ஓராண்டு கழித்து மளிகைக்கடைக்காரர் குருவைத் தேடி வந்து தன்னுடைய கடையை மூடிவிட்டதாக அறிவித்தார் அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா?

உண்மை என்னவெனில் அந்த பல்பொருள் அங்காடியை திறம்பட நிர்வகிக்க முடியாத காரணத்தால் விற்பனைக்கு வந்த போது அந்த மளிகை கடைக்காரர் அந்த சூப்பர் மார்க்கெட்டை விலைக்கு வாங்கிவிட்டார்.

இறைவன் மீது பாரத்தை தந்துவிட்டு நம் கடமையை தொடர்ந்து செய்கின்றபோது நமக்கு எந்த துன்பமும் வருவதில்லை. அப்படி வந்தாலும் இறுதியில் அது இன்பமாகவே முடியும்..!

  • 72