Feed Item
·
Added a post

Dr.ரத்தன்சந்திரகார்

'இவரை(Jarawa)ஜராவா-க்களின் கடவுள்" என்றே சொல்லுவார்கள்.

என்.ஆர்.எஸ்.மெடிக்கல் காலேஜ், கொல்கத்தாவில் படித்தவர். அந்தமான் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவராக வேலை பார்த்தவர்.

அந்தமானில் இருக்கும் ஒரு பழங்குடி இனம் தான் 'ஜராவா'. 2000 வருடமாக காட்டுக்குள் வாழ்பவர்கள். வெளியாட்களைப் பார்த்தாலே விஷ அம்பால் அடிப்பார்கள், 150 வருடமாக யாரையும் நம்பாதவர்கள்.

1998-ல் அந்தமான் நிர்வாகம் இவரை அங்கு அனுப்பியது. அப்போது ஜராவாக்களுக்கு தட்டம்மை வந்து கொத்து கொத்தாக இறந்து கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியே கிடையாது. மொத்தமே 76 பேர் தான் மிச்சம் இருந்தார்கள். இனமே அழியும் நிலை.

இவர் துப்பாக்கி எதுவும் எடுத்து கொண்டு போகவில்லை. தேங்காய், வாழைப்பழம் மட்டும் பரிசாக எடுத்து கொண்டு போனார். முதல் நாள் ஒரு குடிசையில் காட்டுப்பன்றி வேட்டையில் அடிபட்ட ஒருவருக்கு மருந்து போட்டு விட்டு வந்தார். மறுநாள் போகும் போது குழந்தைகள் இவரைக் கட்டி பிடித்து கொண்டார்களாம்.

அதன் பிறகு தான் இவரையும் இவரது குழுவையும் அவங்க "Mitajiley" அதாவது 'நண்பர்கள்' என்று கூப்பிட ஆரம்பித்தார்கள்.

1999 தட்டம்மை உச்சத்தில் ஒரு நாளைக்கு நாற்பது பேர் வரைக்கும் சிகிச்சை செய்திருக்கிறார்.

(Kadamtala Hospital)-கடமட்ல மருத்துவமனையில் அவர்களுக்காகவே பிரத்தியேகமாக 'ஜராவா வார்டைக்' கட்டினார். மூங்கில், வைக்கோல், நடுவில் நெருப்பு மூட்டுவது போல் அவர்கள் வீடு மாதிரியே கட்டி, அவர்கள் கலாச்சாரத்தை மதித்து வைத்தியம் பார்த்தார்.

கடுமையான நோயாளிகளை காட்டில் இருந்து மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு வந்து காப்பாற்றினார்.

இதனால் அவர்களின் மக்கள் தொகை 76-ல் இருந்து இப்போது 270+ ஆக உயர்ந்துள்ளது. தங்களை இன அழிவில் இருந்து அவர் காப்பாற்றியதாக சொல்கிறார்கள்.

இதற்காக, 2023-ல் இந்திய அரசு இவருக்கு 'பத்மஸ்ரீ' விருது கொடுத்தது.

இவர் அவர்களின் கலாச்சாரம் பற்றி "Andamaner Adim Janajati Jarawa" என்று ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார்.

  • 17