Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: திட்​ட​மிட்ட வேலையை திறம்​பட செய்து முடிப்​பீர். உங்​களால் பயனடைந்​தவர்​கள் இப்​போது உங்​களுக்கு உதவி செய்​வார்​கள். அழகு, இளமை கூடும். வியாபாரத்​தில் புதிய யுக்​தி​களைக் கையாண்டு வாடிக்​கை​யாளர்​களை கவரு​வீர். உத்​தி​யோகம் சிறக்​கும்.

ரிஷபம்: தம்​ப​திக்​குள் இருந்த கருத்​து​மோதல் மறையும். விரும்​பிய பொருட்​களை வாங்கி மகிழ்​வீர். பழைய ஃபேன், பிரிட்ஜை மாற்​று​வீர். அலு​வல​கத்​தில் உங்​களின் மதிப்பு கூடும். வியாபாரத்​தில் பங்​குதா​ரர்​களின் ஆலோ​சனைகளை ஏற்று செயல்​படுவது நல்​லது.

மிதுனம்: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்​பீர்​கள். ஈகோ பிரச்​சினை தீர்ந்து தம்​ப​திக்​குள் அன்​யோன்​யம் பிறக்​கும். உடன்​பிறந்​தவர்​கள் உதவி​கர​மாக இருப்​பர். வயிற்​று​வலி, மூக்​கடைப்பு நீங்​கும். அலு​வல​கத்​தில் அமைதி காப்​பீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும்.

கடகம்: குடும்​பத்​தில் விட்​டுக் கொடுத்து போகவும். மக​னின் படிப்பு, மகளின் திரு​மணம் தொடர்​பாக அலைச்​சல், செலவு இருக்​கும். வியாபாரத்​தில் பழைய சரக்​கு​களை போராடி விற்​பீர். அலு​வல​கத்​தில் தான் உண்டு தன் வேலை என்று இருக்க பழகிக் கொள்​ளவும்.

சிம்​மம்: கூடுதலான பணவர​வால் வீட்​டிலுள்ள பழைய பொருட்​களை மாற்​று​வீர். பூர்​வீக வீடு, மனை, விவசாய நிலங்​களை விற்க முயற்சி மேற்​கொள்​வீர். வாக​னத்தை மாற்​று​வீர். அலு​வல​கத்​தில் உயரதி​காரி பாராட்​டும் வித​மாக நடப்​பீர். வியாபாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும்.

கன்னி: சொந்த பந்​தங்​கள் தேடி வரு​வார்​கள். குடும்​பத்​தில் உள்​ளவர்​களின் உணர்​வு​களை புரிந்து கொண்டு அதற்​கேற்ப உங்​களை மாற்​றிக் கொள்​வீர்​கள். அலு​வல​கத்​தில் அடுத்​தவர் விஷயத்​தில் தலை​யிடா​மல் இருப்​பது நல்​லது. வியாபாரத்​தில் லாபம் உண்டு.

துலாம்: குடும்​பத்​தில் நிலவி வந்த குழப்​பம் வில​கும். பணவரவு திருப்​தி​கர​மாக அமையும். பூர்​வீக சொத்து வழக்​கில் சாதக​மான தீர்ப்பு கிட்​டும். வியாபாரத்​தில் நுணுக்​கங்​களை கற்​றுக் கொள்​வீர்​கள். அலு​வல​கத்​தில் செல்​வாக்கு உயரும். மேலதி​காரி​கள் பாராட்​டுவர்.

விருச்​சிகம்: பணவரவு திருப்தி தரும். முன்​கோபத்தை தவிர்ப்​பீர். குடும்​பத்​தில் மகிழ்ச்சி பொங்​கும். பூர்​வீக வீட்​டில் குடிபுக எண்​ணுவீர். அலு​வல​கத்​தில் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்​தில் வாடிக்​கை​யாளர்​களின் ரசனையை புரிந்து கொண்டு அதற்​கேற்ப செயல்​படுவீர்.

தனுசு: தம்​ப​திக்​குள் சின்​னச் சின்ன கருத்​து​மோதல் வரக் கூடும். உடன் பிறந்​தவர்​களை அனுசரித்து நடந்து கொள்​ளவும். பிள்​ளைகளின் உடல்​நலத்​தில் அக்​கறை காட்​ட​வும். வியாபாரத்​தில் பாக்​கி​களை வசூலிப்​பீர். அலு​வல​கத்​தில் தேடிய முக்​கிய ஆவணம் தென்​படும்.

மகரம்: தந்​தையாருடன் இருந்து வந்த பனிப்​போர் வில​கும். நான்​கைந்து நாட்​களாக முடி​யாமலிருந்த வேலைகள் இன்று முடியும். வியாபாரத்​தில் பழைய சரக்​கு​களை விற்​றுத் தீர்ப்​பீர்​கள். பாக்​கி​கள் வசூலாகும். அலு​வல​கத்​தில் அடுத்​தவர் விஷயத்​தில் தலை​யிடாதீர்.

கும்​பம்: சோர்வு நீங்கி முகமலர்ச்​சி​யுடன் காணப்​படுவீர். உடன்​பிறந்​தவர்​களு​டன் இருந்த விவாதம் வில​கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரம் சூடு பிடிக்​கும். புதிய பங்​குதா​ரரின் ஆதரவு கிட்​டும். அலு​வல​கத்​தில் மதிப்பு, மரியாதை உயரும். மேலதி​காரி பாராட்​டுவார்.

மீனம்: பழைய வழக்​கு​களை இப்​போது பேசித் தீர்ப்​பீர். பணவர​வால் மன​நிம்​மதி உண்டு. அக்​கம் பக்​கத்​தினரை பகைத்​துக் கொள்​ளாதீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்​படுவீர்​கள். அலு​வல​கத்​தில் தொல்லை தந்த அதி​காரி, ஆதரவு தரு​வார்.

  • 148