Feed Item
·
Added article

குழந்தையாக அறிமுகமான குட்டி பத்மினி, விசு இயக்கிய பெண்மணி அவள் கண்மணி, அவள் அப்படித்தான், அவர்கள், சகலகலா சம்மந்தி போன்ற படங்களில் துணை நடிகையாகவும் நடித்தார். இதோடு மட்டுமில்லாமல், இவரது வைஷ்ணவி ஃபிலிம்ஸ் எண்டெர்பிரசஸ் லிமிடெட் என்ற தொலைக்காட்சி நிறுவனம் மூலம், கிருஷ்ணதாசி மற்றும் இராமானுஜர் போன்ற பிரம்மாண்ட சீரியல்களையும் தயாரித்துள்ளார். இவர் நடிகரும் தயாரிப்பாளருமான பிரபு நேபாலை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனியாக குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியுள்ளார்.

இவருக்கு கீர்த்தனா, ஃபான்னிங், ரிதினேகா என 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் இளைய மகள் ரிதினேகாவிற்கு தற்போது திருமணம் நடக்கவுள்ளது. இந்த இனிப்பான 'செய்திளை குட்டி பத்மினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், என் மகளுக்கு ஒருவரை பிடித்து இருக்கிறது. அவர் பெயர் அஷ்வின். அவரின் குடும்பத்தை நான் போய் சந்தித்தேன். அவர்களும் எங்க வீட்டுக்கு வந்து அனைவரையும் சந்தித்து பேசினார்கள். ரொம்ப நல்ல குடும்பம், அனைவரையும் எனக்கு பிடித்து இருக்கிறது. எனக்கு மகன் இல்லாத குறையை என் மருமகன் அஷ்வின் நிரப்பிவிட்டார். அம்மா... அம்மா... என அவர் கூப்பிடும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

நவம்பர் மாதம் திருமணத்தை நடித்த திட்டமிட்டு இருக்கிறோம் எனது சந்தோஷத்தை குட்டி பத்மினி பகிர்ந்துள்ளார். தனி ஆளாக நின்று மகள்களை வளர்த்த குட்டி பத்மினியின் இந்த அறிவிப்பிற்கு நெட்டிசன்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

  • 37