Feed Item
·
Added a post

ஆண்கள் சட்டையில் பட்டன் வலது பக்கமும், பெண்கள் உடையில் பட்டன் இடது பக்கமும் இருக்கும். இது வெறும் டிசைன் இல்லை... பல ஆண்டுகளாக வந்த ஒரு மரபு.

ஏன் இப்படின்னு கேட்டா, அதுக்கு ஒரே ஒரு உறுதியான பதில் இல்லை. ஆனா சில சுவாரஸ்யமான காரணங்கள் சொல்லப்படுது.

அந்தக் காலத்துல பெரும்பாலான ஆண்கள் தாங்களே உடை அணிந்ததால், வலது கைப் பழக்கத்துக்கு ஏற்ற மாதிரி பட்டன் வலது பக்கம் வைக்கப்பட்டதாம்.

வசதியான குடும்ப பெண்களுக்கு வேலைக்காரிகள் உடை அணிவித்து விடுவாங்க. எதிரே நின்னு பட்டன் போட அவர்களுக்கு எளிதாக இருக்கணும்னு பெண்கள் உடையில் பட்டன் இடது பக்கம் வைக்கப்பட்டதாம்.

இன்னொரு கருத்து...பெரும்பாலான ஆண்கள் வலது கைப் பழக்கம் உள்ளவர்கள்... வாளை இடது இடுப்பில்தான் அணிவார்கள். அப்போதுதான் வலது கையால் வாளை உருவி எடுக்க முடியும்.

அப்படிப்பட்ட சூழலில், மேலாடை இடது பக்கம் மேலாகவும், வலது பக்கம் உள்ளேயும் மூடப்பட்டிருந்தால் (அதாவது ஆண்கள் உடையில் இருக்கும் வழக்கம்), வாளை உருவும்போது ஆடையின் விளிம்பு எளிதில் திறந்து காற்றில் பறப்பது அல்லது வாளில் சிக்கிக்கொள்வது குறையும் என்பதே காரணம் எனவும் சொல்லப்படுகிறது.

இவை எல்லாமே வரலாற்றில் சொல்லப்படும் விளக்கங்கள்தான். ஆனால் இதுதான் உண்மையான காரணம் என்று நிரூபிக்கப்பட்ட ஆதாரம் இல்லை.

இப்போ காலம் மாறிடுச்சு. யூனிசெக்ஸ் டிசைன்கள், நவீன ஃபேஷன் காரணமாக இந்த வேறுபாடு பல உடைகளில் இல்லவே இல்லை.

நான் இந்த பதிவு போடும் முன் சில ஆன்லைன் aap களில் பார்த்த போது ஆச்சரியம்... பெண்களின் ஷர்ட் களில் பட்டன் இடது புறம்தான் இருந்தது.

இனிமேல் சட்டையில பட்டன் எந்தப் பக்கத்துல இருக்குன்னு பார்த்தா, அதுக்குப் பின்னாடி இருக்கும் இந்த சுவாரஸ்யமான வரலாறும் ஞாபகம் வரும்.

  • 62