Feed Item
·
Added article

துபாய் சென்றுள்ள நடிகர் பார்த்திபன் மருத்துவமனைக்கு தனது பர்ஸ் ஹோட்டலில் மறந்துவிட்டு சென்றுள்ளார். மருத்துவமனைக்கு பணம் கட்ட துபாயில் பல செல்வந்தர்களை தொடர்புக்கொண்டும் கைவிரித்துவிட்ட நிலையில் ஓட்டுனராக பணிபுரியும் லால்பேட்டை சார்ந்த A.R தாஜூத்தீன் அவர்கள் தனது பணத்தை கொடுக்க முன்வந்து உதவியுள்ளார்.

அதை நடிகர் பார்த்திபன் அவரது முகநூல் பக்கத்தில் நெகழ்ச்சியாக பதிந்த பதிவு:

Hospital செல்லும் வழியில் credit/debit card உள்ள என் purse-ஐ hotel-லில் வைத்து விட்டு மறதியோடு சென்று விட்டேன்.

Bill 7911.25 Dirhams! which is commonly abbreviated as AED

நம்மூர் Gandhi talks-ல் 1,97,781.25 (approxi)

Purse miss-Hotel

long dis

So,

நண்பர்களிடம் கைமாத்தாகக் கையேந்தும்

அவசர நிலை!

ஊதும் சிகிரெட்டை ஒதுக்கிவிட்டு உதடு பிதுக்கினர் சிலர்,signal கிடைக்கவில்லையென 🚦-ஐ cross செய்தபடி stearing-ஐ திருப்பினர் சிலர்,

அந்தப் பணக்கார்ர்களின் மனதில் ….

கேட்பது ஒரு celebrity கொடுத்துவிட்டு திரும்ப கேட்க முடியாமல் போய் விட்டால்?நியாயம் தானே?

குறுகிய காலத்திற்குள் என் மனம் சற்றே கருகியது

அதை இறுகிய என் முகம் வெளியில் காட்டிக் கொடுத்து விட்டது.

பின்புறமிருந்து ஒரு தன்மையான குரல்” சார் நீங்க தப்பா நினைக்கலைன்னா..” என்றபடி கைநிறைய

அந்நாட்டு currency-ஐ நீட்டினார் ஆச்சர்யத்துடன் பார்த்தேன் “5000 தான் இருக்கு கொஞ்சம் time குடுத்தீங்கன்னா மீதியை புரட்டிகிட்டு வர்றேன்.

“நீங்க என்ன சார் பண்றீங்க”ன்னு கேட்க,

“டிரைவர்”-என்றார் டக்கென உட்புகுந்து மனதில் நின்றார்.பணக்கார்ர்கள் வரூம் ஆனா வராதூ என என்னத்தே கண்ணையாவாக சிந்திக்கும் வேளையில் மொத்த சேமிப்பையே வராவிட்டாலும் பரவாயில்லையென தரத் தயாரானவரின் தரமான இதயத்தை சற்றே உற்று நோக்கியப் பின் பணத்தை அவர் பாக்கெட்டில் வைத்துவிட்டு கரங்களை கண்களில் ஒற்றிக் கொண்டேன். இப்பதிவு அம்மாமனிதரின் மனிதாபிமானத்தை பறைசாற்றவேத் தவிர, மற்றோரை கோடியில் dirham பெற்றோரை குறை சொல்ல அல்ல. கோடிகளில் உள்ளோர் உள்ள நாடுகளில் , மனம் படைத்தோர் மட்டும் பல கோடியில் ஒருவர் இருவரே உளர். உணர்!

அதற்குள் என் மகள் கீர்த்தனாவிடம் கேட்டிருந்த online transaction done successfully !

இடையில் என் மீது சந்தேகப்பட்ட Philippines receptionist-யிடம் அவசரப்பட்டு அடகு வைத்திருந்த என் passport-ஐ மீட்டுக் கொண்டு வந்தேன்.

பணம் போயின் பிணமே அதுவும் மானம் போன பிணமே!

புகைப்படத்தில் அந்த Mr. A R Thajuddeen

Driver by profession but really a great human!

  • 136