Feed Item
·
Added a post

ரொம்ப ராசியான கல்லு சார் ! எத்தனை பேரிடம் போனாலும் என்னிடம் சரியாக திரும்பி வந்து விடும் !

கன்னம் டொக்கு விழுந்த ராஜு சேவிங் செய்துகொள்ள பார்பர் ஷாப் போனான்.

குழி விழுந்த கன்னத்துக்குள் சரியாக சேவிங் பிளேடு போட முடியாததால் பார்பர் ஒரு கூழாங்கல்லை குடுத்து அவன் கடைவாயில் வைத்துக்கொள்ள சொன்னார். கூழாங்கல் அவன் வாயிக்குள் அடைத்து அவன் கன்னம் குழியில்லாமல் இருந்ததால் வசதியாக சேவிங் செய்து முடித்தார்.

ஷேவிங் முடிந்துவிட்டு இருந்த நிலையில் அவன் தவறுதலாக அந்த கூழாங்கல்லை விழுங்கிவிட்டான்.

பார்பர் சொன்னார் “ஒன்னும் கவலை படாதீங்க. ரெண்டு நாளுக்குல்ல வெளியே வந்துடும். எடுத்து சுத்தம் செய்து என்கிட்ட வந்து குடுத்துடலாம். இதுக்கு முன்ன இந்த கூழாங்கல்லை விலுங்குனவங்க எல்லாம் அப்படிதான் செஞ்சாங்க”

  • 24