பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா இன்று (நவம்பர் 24, 2025) மும்பையில் காலமானார். அவருக்கு வயது 89.
பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் காலமானார். 89 வயதான தர்மேந்திரா இந்த மாத தொடக்கத்தில் தெற்கு மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அவர் காலமானார். அவரின் மறைவுக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
