Feed Item
·
Added a news

தென் அல்பர்ட்டாவில் உள்ள க்ளென்வுட் பகுதியில், 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். க்ளென்வுட் நகரின் மேற்கே சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் கைவிடப்பட்டடிருந்த நிலையில் ஒரு வாகனம் இருப்பதாக மவுண்டீஸ் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த வாகனத்துக்குள் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலம் குறித்த பிரதே பரிசோதனை (autopsy) நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் தகவல் தெரிந்தவர்கள் உடன், கார்ட்ஸ்டன் RCMP காவல் நிலையத்தை 403-653-4931 என்ற எண்ணிலும், அல்லது இரகசியமாக தகவல் வழங்க விரும்புவோர் 1-800-222-8477 என்ற Crime Stoppers எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 202