Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் செலவு, அலைச்சல் இருக்கும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும் வியா பாரத்தில் யாரையும் கடுமையாக பேசாதீர்கள். கடையை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் தொந்தரவு வரக்கூடும்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

மிதுனம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மனநிறைவு கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மாணவர்களின் கனவு நனவாகும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

கடகம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். அலுவலகத்தில் புதிய பொறுப்பு தேடி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்: தாயாரின் நீண்டநாள் விருப்பங்களை பூர்த்தி செய்வீர். குடும்ப பிரச்சினை முடிவுக்கு வரும். சோர்வு நீங்கி முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூடும். புது கருத்துகளால் அனைவரையும் வசீகரிப்பீர். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.

துலாம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படவும். பூர்வீக சொத்து வழக்கில் வெற்றி கிட்டும். அலுவலகத்தில் கோப்புகளை கவனமாக கையாளவும். வியாபாரத்தில்வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் வரலாம். குடும்பத்தாரின் பேச்சுக்கு மதிப்பு அளிக்கவும். வாகனத்தில் கவனத்துடன் இருப்பது அவசியம். வியாபாரத்தில் பணியாட் களின் தொந்தரவு இருக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.

தனுசு: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வியாபாரத்தில் லாபமுண்டு. உத்தியோகத்தில் நிம்மதி பிறக்கும். மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.

மகரம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்திகள் வரும். புது அனுபவம் கிட்டும். புதிதாக வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். தாயாரின் உடல்நிலை சீராகும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் தடைபட்ட பணிகள் நிறைவடையும்.

கும்பம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பதவி கிட்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.

மீனம்: உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். கடையை மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு மாற்றுவீர்.

  • 138