பளிங்கு சிலை போல சினிமாத்துறையில் அறிமுகமான நடிகை கிரண், 'யாதீன்' என்கிற இந்தி படத்தில் முதன் முதலாக நடித்தார். அந்த படத்திற்கு பின் தமிழுக்கு வந்த இவர், சியான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழில் அன்பே சிவம், வின்னர், வில்லன் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்து வந்த கிரணுக்கு திடீரென பட வாய்ப்பு குறைய, திருமலை படத்தில் வாடியம்மா ஜெக்கம்மா பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
நடிகை கிரண் அதன் பின் 'நியூ' படத்தில் எஸ்.ஜேசூர்யாவுடன் பல விவகாரமான காட்சியில் நடித்தார். அந்த படத்திற்கு பின் மொத்தமாக காணாமல் போன கிரண், வருமானத்திற்கு வழியில்லாததால், இன்ஸ்டாகிராமில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். எனக்கு யாரும் நடிக் வாய்ப்பு கொடுக்கவில்லை, பட வாய்ப்பு கேட்டால், அட்ஜெஸ்ட்மென்டுக்கு அழைக்கிறார்கள் என கிரண் வெளிப்படையாகவே பேட்டி ஒன்றில் கூறினார். இதையடுத்து, தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவரால் தாக்குபிடிக்க முடியாமல் போன வேகத்திலேயே வந்துவிட்டார். வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த கிரணுக்கு வனிதா விஜயகுமார் இயக்கி நடித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் 'சிவராத்திரி' பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
அந்த படத்திற்கு பிறகு கிரண் தனக்கு எதாவது படவாய்ப்பு வரும் என எதிர்பார்த்தார். ஆனால், எதுவும் வராததால், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போட்டோவை ஷேர் வெளியிடுவதை வேலையாக வைத்து இருக்கிறார். தற்போது இவர், மிகவும் கவர்ச்சியாக இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். சிலர் அந்த போட்டோவிற்கு லைக்குகளை போட்டாலும் சிலர், அவர் கண்டபடி திட்டி வருகின்றனர்.
