அறம் மிகுந்த வாழ்வு
ஆறுதல் தரும் சொற்கள்
இதம் நிறைந்த பார்வை
ஈகை நலமிகு கரங்கள்
உறுதி குறையாத உள்ளம்
ஊக்கம் தணியாத நம்பிக்கை
எள்ளல் கலக்காத நடத்தை
ஏற்றம் சேர்ந்த குணம்
ஐயுறவு இல்லாத நட்பு
ஒழுக்கம் குன்றாத தலைமுறை
ஓதுதல் ஓம்பும் நாட்கள்
ஔடதம் தேடாத மணித்துளிகள்
அமைந்திட நல்வாழ்த்துகள்
வேண்டும் வேண்டும் வாழ்த்துங்கள்.