விஜய்யின் கில்லி படத்தில் புவனாவாக நடித்து புகழ் பெற்ற நடிகை நான்சி ஜெனிபர், கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் நவம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை விடுதியில் பாரம்பரிய இந்து முறைப்படி நடந்தது.
திருமண வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்களும், திரைத்துறையினரும் மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கில்லி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த நான்சி, இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.