Feed Item
·
Added a post

ஒரு ஊரில் ஒரு பெரிய கம்பெனிக்கு வேலைக்கு ஆட்களை சேர்த்துக் கொண்டிருந்தார்கள் BE /Mcom /MBA போன்ற படிப்பையெல்லாம் முடித்தவர்கள் கூட அந்த இன்டெர்வியுவில் தேர்வாகாமல் திரும்பிக் கொண்டிருக்கின்றனர் . அப்போது வெறும் SSLC (10-வது ) மட்டுமே படித்த நமது நபர் ஒருவர் மட்டும் அந்த கம்பெனிக்கு தேர்வாகின்றார்..அப்படியென்ன அவர் தேர்வில் தேறினார் என்பதை தெரிந்து கொள்ள வாருங்கள்

இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் :- இன்டெர்வியு செய்பவரை பார்த்து " வணக்கம் ஐயா "

இன்டெர்வியு செய்பவர் :- வணக்கம் உங்க பெயர் என்ன ?

இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் :- என் பெயர் சிதம்பரம்

இன்டெர்வியு செய்பவர் :- உங்க அப்பா அம்மா பெயரைச் சொல்லுங்ககள்

இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் :- ஏகாம்பரம் எங்கப்பா பெயர் எங்கம்மா பெயர் கனகாம்பரம்

இன்டெர்வியு செய்பவர் : உங்க தாத்தா பெயர் என்ன ?

இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் :- பீதாம்பரம்

இன்டெர்வியு செய்பவர் :- நீங்க எங்கிருந்து வரீங்க ?

இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் :-எங்க வீட்ல இருந்துதான் வரேன்

இன்டெர்வியு செய்பவர் :- ஏம்பா கிண்டல் பண்றீயா ? உங்க வீடு எங்கேயிருக்கு ?

இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் :- தாம்பரம்

இன்டெர்வியு செய்பவர் :- உங்களுக்கு பிடிச்ச விளையாட்டு எது ?

இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் :-" பம்பரம் " விடுறது

இன்டெர்வியு செய்பவர் :- BE /Mcom /MBA பட்டதாரிகளே இந்த இன்டெர்வியூ அட்டன் பண்ண முடியாம திரும்பி போய்ட்டாங்க நீ வெறும் SSLC படிச்சுட்டு வந்துருக்கே

இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் போங்க சார் என்னோட படிப்பு நாலெழுத்து மத்தவங்களோடது எல்லாம் வெறும் 2 இல்ல 3 எழுத்து தான் சோ என் படிப்பு தான் பெரிய படிப்பு

இன்டெர்வியு செய்பவர் :- உங்களுக்கு இந்த வேலை கிடைக்கலனா என்ன பண்ணுவீங்க ?

இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் :- வெளிய போய் இதே மாதிரி கம்பெனி ஆரம்பிச்சி இன்டெர்வியு நடத்தி பொழைச்சுக்குவேன் சார்

இன்டெர்வியு செய்பவர் :- வேற லாங்குவேஜ் தெரியுமா ?

:இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர்- தெரியும் சார் நான் தண்ணியடிச்சா மட்டும் அந்த பாஷையை பேசுவேன்

இன்டெர்வியு செய்பவர் :- உங்க எதிர்கால குறிக்கோள் என்ன ?

:இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் :- நான் உங்க சீட்ல உட்காரனும் சார் நீங்க என் சீட்ல உட்காரனும் சார்

இன்டெர்வியு செய்பவர் :- யூ ஆர் அப்பொய்ன்டெட் கங்கிராட்ஸ்

  • 185