இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பமான சூழல் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். பூர்வீக வீட்டை சீரமைப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். புகழ் ஓங்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
ரிஷபம்
வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பார்ப்புகளில் இருந்த தடைகள் விலகும். மேல்நிலைக் கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகன பிரச்சனைகள் குறையும். வாசனை திரவியங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான காரிய அனுகூலம் ஏற்படும். வெற்றி கிட்டும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம்
உடன் பிறந்தவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வருவாய் மேம்பாடு சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபாரத்தில் ஒத்துழைப்பான சூழல் அமையும். நெருக்கடியான சூழல்கள் படிப்படியாக மறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
தடைபட்ட வரவுகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றங்கள் பிறக்கும். வியாபாரப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். மனதில் இருக்கும் தனிப்பட்ட ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். பயணம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். முக்கியமான சில முடிவுகளை எடுப்பீர்கள். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
திடீர் சுபசெய்திகள் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மற்றவர்களின் பணிகளை சேர்ந்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். சமூகப் பணிகளில் கோபம் இன்றி பொறுமையுடன் இருக்கவும். வர்த்தக பணிகளில் நிதானம் வேண்டும். அமைதி நிலவும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
கன்னி
வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். மூத்த உடன்பிறப்புகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சமூகப் பணியில் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. ஆடம்பரப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். செலவு கூடும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
துலாம்
வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகளும் ஒத்துழைப்பும் உருவாகும். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். சுபகாரிய தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். தாமதம் ஏற்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
விருச்சிகம்
உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாகன வசதிகள் மேம்படும். புதிய வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மனதளவில் இருந்த குழப்பங்கள் மறையும். இயந்திர பழுதுகளை சரி செய்வீர்கள். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். சேவை துறைகளில் இருப்போர்க்கு மேன்மை ஏற்படும். ஆதரவு பெருகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
தனுசு
ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபார நிலுவை பாக்கிகள் வசூலாகும். சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். உயர்வு காணும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
மகரம்
நினைத்த சில பணிகளில் போராட்டங்கள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். கடன் செயல்களில் பொறுமை வேண்டும். வருமானப் பற்றாக்குறை பற்றிய எண்ணங்கள் மேம்படும். வாகன வழியில் திடீர் செலவுகள் உண்டாகும். புதியவர்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும். அலைச்சல் மிகுந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கும்பம்
பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் உருவாகும். சுப காரிய முயற்சிகள் கைகூடிவரும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உயர் கல்வியில் இருந்த இன்னல்கள் குறையும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மீனம்
இழுபறியான வரவுகள் கிடைக்கும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். உணர்வுபூர்வமாக பேசுவதை குறைத்துக் கொண்டு சூழ்நிலை அறிந்து செயல்படவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு