Feed Item
·
Added article

மலையாள நடிகையான அன்னா ராஜன், சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போது இவர் பொது நிகழ்ச்சி ஒன்றில் பாவாடை ஜாக்கெட்டுடன் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள நடிகையான அன்னா ராஜன், நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து மகிழ்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

அப்போதும் சர்ச்சைக்குரிய நடிகையாக இருக்கும் இவர், சில தினங்களுக்கு முன்பு, தன்னுடைய புகைப்படங்களை சிலர் தவறான நோக்கத்தில் மார்ஃபிங் செய்து, நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இணையத்தில் பரப்பியதாக அன்னா ராஜன் வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்தச் செயல் எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தவறான நோக்கில் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களைப் பரப்புபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, கேரளக் காவல்துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்குகளைத் டேக் செய்து புகாரளித்திருந்தார்.

மார்ஃபிங் சர்ச்சை ஓய்வதற்குள், கேரளாவில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் அன்னா ராஜன் கலந்துகொண்டபோது அவர் அணிந்து வந்த உடை புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பச்சை பாவாடை ஜாக்கெட் மட்டுமே அணிந்து அந்த விழாவிற்கு வந்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, ஒரு பொது நிகழ்ச்சிக்கு இப்படிப்பட்ட ஆடையை அணிந்து வருவது முறையா? எனப் பலரும் முகம் சுளிக்கும் வகையில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதேவேளையில், அன்னா ராஜனுக்கு ஆதரவாக, ஒருவர் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவர்களுடைய தனிப்பட்ட உரிமை மற்றும் விருப்பம். அதைப் பற்றித் தேவையில்லாமல் விமர்சிப்பதும், தேவையில்லாத விவாதங்களை உருவாக்குவதும் முற்றிலும் தவறானது. என்று அன்னா ராஜனின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சிலர் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். பொது நிகழ்ச்சிக்கு நடிகை அன்னா ராஜன் அணிந்து வந்த ஆடை விவகாரத்தாலும் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவிலான டிரெண்டாகி வருகிறது.

  • 12