Feed Item
·
Added a post

சிறுவன் ஒருவன் அம்மாவிடம் வந்து ! அம்மா வாழ்க்கையின் ரகசியம் என்ன என்று கேட்க!

அதற்கு அம்மா மகனிடம் சொன்னார்கள்!

வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பது என்று சொன்னார்கள்!

பள்ளிக்கூடம் சென்றான் சிறுவன்!

வகுப்பில் ஆசிரியர் மாணவர்களை பார்த்து நீங்கள் வளர்ந்து என்னவாக போகிறீர்கள் என்று கேட்க !

அதற்கு ஒரு மாணவன் நான் டாக்டர் ஆக போகிறேன் என்று சொல்ல!

மற்றொருவன் நான் இன்ஜினியர் ஆக போகிறேன் என்று சொல்ல!

மற்றொருவன் நான் கலெக்டர் ஆக போகிறேன் என்று சொல்ல!

நம்ம சிறுவனிடம் நீ வளர்ந்து என்னவாக போகிறாய் என்று கேட்க!

அதற்கு சிறுவன் நான் மகிழ்ச்சியாக இருக்க போகிறேன் என்று சொல்ல!

அதற்கு ஆசிரியர்! தம்பி நீ கேள்வியை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று சொல்ல!

அதற்கு சிறுவன் சிரித்து கொண்டே சொன்னான்!

" டீச்சர் ! நீங்கள் தான் வாழ்க்கையை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று "

  • 760