கோலிவுட்டின் முன்னணி நடிகை திரிஷா கிருஷ்ணன் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இந்த முறை படங்களுக்காக அல்ல, கோவையில் அவருக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்புக்காக. அக் 27 காலை இந்த நிகழ்வு நடந்ததாக தகவல் வெளியானது.
கூட்டத்தை பார்த்த மக்கள் உடனடியாக அவர் தமிழ்நாட்டில் அரசியலில் நுழையப் போகிறாரா என்று விவாதிக்க தொடங்கினர். கோவையை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டதை ஒட்டி இந்த நிகழ்வு நடந்தது.
சேலையில் கவர்ச்சியாகவும் அதே சமயம் கம்பீரமாகவும் தோன்றிய திரிஷாவின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவரது புதிய தோற்றமும், மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.