27 வயதாகும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சேயோன் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் லேட்டஸ்ட்டாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்த ஆண்டு ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய லாபத்தை சிவகார்த்திகேயனுக்குப் பெற்றுத் தந்த படம் தாய் கிழவி. அந்த படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சேயோன் படத்தில் நடித்து வருகிறார்.
அமரன் படத்திற்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தை சந்தோஷமாக கமல்ஹாசன் தயாரித்து வருகிறார். காந்தா படத்தில் நடிப்பில் மிரட்டிய பாக்யஸ்ரீ போர்ஸ் சிவகார்த்திகேயன் ஜோடியாக மாறிய நிலையில், அவரது இன்ஸ்டா ஃபாலோயர்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டனர். யாரு இந்த பாக்யஸ்ரீ போர்ஸ்?: சந்து சாம்பியன் படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்து இந்தியில் அறிமுகமானவர் தான் பாக்யஸ்ரீ போர்ஸ். ரவிதேஜா நடிப்பில் தெலுங்கில் வெளியான மிஸ்டர் பச்சன் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா பக்கம் வந்தவர் இங்கேயே செட்டில் ஆகிவிட்டார். விஜய் தேவரகொண்டாவுடன் கிங்டம், துல்கர் சல்மான் உடன் காந்தா, ராம் பொத்தினேனியுடன் ஆந்திரா கிங் தாலுகா, இந்த ஆண்டு அகில் அக்கினேனி ஜோடியாக லெனின் என வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக சேயோன் படத்தில் நடித்து வருகிறார்.