Feed Item
·
Added a post

ஒரு மகன் தன் தந்தையிடம் சென்று அப்பா நான் இருக்கிற இடத்தில் எனக்கு மரியாதை இல்லை என்று சொன்னான். யாருமே என்னை மதிப்பதில்லை என்று வருத்தப்பட்டான்.

அவனிடம் அப்பா ஒரு வாட்ச் கொடுத்து இதை விற்று கொண்டு வா என்று சொன்னார்.

அவன் ஒரு வாட்ச் ரிப்பேர் கடைக்கு சென்று அதை காட்டிய போது அம்பது ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னார்கள்.. அவன் அதை அப்பாவிடம் வந்து சொன்னான். இதை ஒரு நகைக்கடையில் கொண்டு போய் கொடு என்று சொன்னார்.

நகைக்கடையில் அவர்கள் தம்பி இது பழைய தங்கம் அதனால் ஒரு 500 ரூபாய் தருகிறோம் என்று சொன்னார்கள்.. ஆச்சரியம் அவன் அப்பாவிடம் வந்து அப்பா இதற்கு 500 ரூபாய் தருகிறார்களே என்று சொன்னான்.

அவனப்பா சிரித்துக் கொண்டே இதை ஒரு மியூசியத்தில் கொடு என்று சொன்னார்... அவர்கள் தம்பி இது மிகவும் பழமையான வாட்ச் இதை நாங்கள் ஐம்பதாயிரத்திற்கு எடுத்துக் கொள்கிறோம்.. அதிகம் தேவைப்பட்டாலும் தருகிறோம் என்று சொன்னார்கள்.... அவன் அதை தன் அப்பாவிடம் வந்து சொன்னான்..

அப்பொழுது அவன் அப்பா சொன்னார் உனக்கு மதிப்பில்லை என்று நீ உணருமிடம் நீ இருக்க தகுதியில்லாத இடம் நீ இருக்கும் இடத்தை மாற்று உன் மதிப்பு தானாய் உயரம் என்று சொன்னார்.

மதிப்பு என்பது பொருளில் இல்லை அது போய் சேரும் இடத்தில் இருக்கு! உன் மதிப்பு எங்கே என்று நீ தான் தேடி செல்ல வேண்டும் என்றார்!

  • 158