Feed Item
·
Added a news

கனடாவின் ஒண்lடாரியோ மாகாணத்தில் 30000 டொலர் பெறுமதியான டிசைனர் சன்கிளாஸ்கள் திருடிய பெண் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஒண்டாரியோவின் பிகரிங் நகரின் ஒரு மாலில் இருந்து 30,000டொலர் மதிப்புள்ள டிசைனர் சன்கிளாஸ்கள் திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில், டொரண்டோவைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிகரிங் சிட்டி சென்டர் மாலில் உள்ள லென்ஸ் கிராப்ட்ஸ் விற்பனையகத்திற்கு மூன்று பெண்கள் நுழைந்து, 60-க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த டிசைனர் கண்ணாடிகளை கொள்ளையிட்டுள்ளனர். காவல்துறையினர் பின்னர் மூன்று சந்தேகநபர்களில் இருவரை அடையாளம் கண்டுள்ளனர்.

அதன்படி, அக்டோபர் 26 அன்று டொரண்டோவில் டுன்டாஸ் மேற்கு வீதி மற்றும் ஸ்கார்லெட் வீதி பகுதியிலுள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, 25,000 டொலருக்கும் மேற்பட்ட திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 33 வயதான கரோலின் வெனிசா வோல்கர் என்பரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஏனயை சந்தேக நபர்கள் தாங்களாகவே சரணடைய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • 17