மனிதர்களைப் பொருட்களைப்போல் நடத்துவதும் பொருட்களை மனிதர்களைப்போல் பயன்படுத்துவதும் இன்றைய உலகின் இயல்பாகிவிட்டாலும் இச்சூழலிலிருந்தும் இத்தன்மையிலிருந்தும் , பலர் சாதுர்யமாக தப்பிவாழ்கிறார்கள்.
சிலர் சூழலுக்குத்/ மனிதர்களுக்குத் தக்கவாறு வாழ்வதையும் இயல்பாக கடைபிடிக்கிறார்கள். அவர்கள் இயல்பாகவும் அதனையே மாற்றிக்கொண்டுவிடுகிறார்கள். அடுத்தவர் வலியை அறிவதில்லை. பணம் -பதவி- தகுதி கண்டு பழகுகிறார்கள். தங்களையே அறிவிற் சிறந்தவர்களாகவும் கருதிக்கொள்கிறார்கள். காலத்தின் வலிமையை அவர்கள் உணர்வதில்லை . வரலாறு நெடுக மனிதர்களின் கதைகள் உள்ளதையும் அறிந்தும் அறியாது திரிகிறார்கள்.
மனிதர்களைப் போற்றுகிறவர்களாக வாழவும்
மனிதர்களை, மனித மனத்தின் வலியை உணர்ந்தவர்களோடும்
வாழவும் , வாழ்க்கை வளமாகவும் நல்வாழ்த்துகள்.