Feed Item
·
Added a news

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய வம்சாவளியினர் ஐந்து பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Abbotsfordஇல் ஜனவரி மாதம் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டார். அவரைக் கடத்திச் சென்ற சிலர் படுகாயமடைந்த நிலையில் அவரை சர்ரேயிலுள்ள கிரெசண்ட் கடற்கரையில் வீசிச் சென்றுள்ளனர். தகவலறிந்த பொலிசார் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்று அவர் உயிரிழந்துவிட்டார்.

தற்போது, அந்த சம்பவம் தொடர்பில் ரவ்தீப் சிங் (21), ஹர்மன்தீப் கில் (26), ஜஸ்கரன் சிங் (20) மற்றும் பிபன்பிரீத் சிங் (22) ஆகியோர் மீது விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி அடைத்துவைத்தல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தர்பிரீத் கோசா (19) என்னும் இளைஞர் மீது விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி அடைத்துவைத்தல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • 1067