தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என வலம் வந்தவர் கங்கை அமரன். இளையராஜாவின் சகோதரரான இவர், இப்போது முதன்மை பாத்திரத்தில் நடிகராகக் களமிறங்குகிறார்.
அறிமுக இயக்குநர் டிடி பாலசந்திரன் இயக்கும் படம், ‘லெனின் பாண்டியன்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கங்கை அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கு முன் சில படங்களில் சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டியுள்ள அவர், இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஒரு நிமிட வீடியோவில் கங்கை அமரனின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் கிராமத்து முதியவராக துரைராசு என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இதையடுத்து நடிகர் சரத்குமார் உள்பட பல திரைபிரபலங்களும் ரசிகர்களும் அவரை பாராட்டியுள்ளனர்.
