சின்னத்திரையில் பிரபலமான குக் வித் கோமாளி பாலா இப்போது ஹீரோவாக அறிமுகமாகிறார். குக் வித் கோமாளி மற்றும் கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளின் மூலமாக பிரபலமானார். இந்நிகழ்ச்சின் மூலமாக பிரபலமானதைத் தொடர்ந்து சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்தார். கெட்டப் சேஞ்ச் செய்தார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். குறுகிய காலத்திலே சினிமாவில் தன்னை ஒரு அங்கமாக மாற்றிக் கொண்டார். ஒரு சில படங்களிலும் நடிக்கவும் செய்துள்ளார்.
பாலா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி பாலாவின் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குநர் ஷெரிப் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் தான் பாலா ஹீரோவக நடிக்கிறார். இந்தப் படத்தில் நமீதா, அர்ச்சனா, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.
ஜெய்கிரண் இந்தப் படத்தை தயாரிக்கிறார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படம் வாழ்வில் எதார்த்தம், நேர்மை மற்றும் எளிமையை பிரதிபலிக்கும் ஒரு படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றிலும் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் காந்தி கண்ணாடி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் மற்றும் கதை இரண்டுமே ஒத்துப் போகும் அளவிற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுதான் டைட்டில், இதைவிட படத்திற்கு வேறொரு டைட்டில் வைக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் ஜெய்கிரண் கூறியிருப்பதாவது: இந்தப் படம் வாழ்க்கையில் எதார்த்தத்தை பிரதிபலிக்கும் ஒரு படமாக இருக்கும்.
காந்தி கண்ணாடி எனக்கு பிடித்த படம். படத்திற்கான கதை கேட்ட உடன் எனக்கு கதை பிடித்துவிட்டது. படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் இருப்பது படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது என்றார்.