Feed Item
·
Added a news

கடந்த நவம்பர் மாதம் முதல் கனடாவில் 20, 50 மற்றும் 100 டொலர் மதிப்புள்ள போலி கனடிய நாணயத் தாள்கள் பரவல் கணிசமாக அதிகரித்துள்ளதாக கனடிய சில்லறை விற்பனை பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஒரே ஒரு மாதத்தில் கண்டறியப்பட்ட போலி நாணயத் தாள்களின் எண்ணிக்கை, முந்தைய முழு ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போலி நோட்டுகள் தயாரிக்கும் நபர்கள் தங்களின் தொழில்நுட்பங்களை மிகவும் மேம்படுத்தியுள்ளனர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி பெற்ற கண்களுக்குக் கூட உண்மையான நோட்டுகளையும் போலி நோட்டுகளையும் வேறுபடுத்துவது கடினமாகி விட்டது.

ஹோலோகிராம்கள் கூட மிகத் துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது. இந்த போலி நாணயத் தாள் பரவல் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகரித்திருப்பது சாத்தியமானதென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த காலத்தில் கடைகள் மிகவும் பரபரப்பாக இருக்கும். ஒரே நேரத்தில் பலர் வாங்குவதால், தவறுகளை கவனிப்பது கடினமாகிறது.

  • 61