Feed Item
·
Added article

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி இன்று காலை மணிலா விமான நிலையத்தில் வந்து இறங்கினார். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உள்ளடக்கிய வளர்ச்சி உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் பிலிப்பைன்ஸ் வந்துள்ளார். நாளை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் அவர் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்கிறார்.

கம்போடிய இயக்குநர் ரித்தி பானுடன் இணைந்து நினைவுகளில் இருந்து நம்பிக்கைக்கு என்ற தலைப்பில் அவர் உரையாற்றவுள்ளார். நடிகை என்பதையும் தாண்டி மனிதாபிமான செயல்பாடுகளுக்காக அறியப்பட்டவர் இவர். அவரது வருகை மணிலாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

  • 31