Feed Item
·
Added article

இயக்குனர் நடிகர் பாண்டியராஜனை ராதிகாவுக்கு பிடிக்காதாம், இப்போ இல்ல அப்போ அந்த 80ஸ் காலக்கட்டத்தில் அவர் பரபரப்பா பாக்யராஜ் படத்தில் நடிக்கிற டைம்ல பிடிக்காதாம். அந்த காலக்கட்டத்துல பாக்யராஜ் படத்தில் நடிக்கிறப்போ அந்த காலக்கட்டத்தை குறிப்பிட்டு ராதிகா ஒரு விசயம் பேசியதை பார்த்தேன்.

அப்போ பாக்யராஜின் தாவணி கனவுகள், இன்று போய் நாளை வா என பல படங்களில் ராதிகா நடித்துள்ளார், இயக்குனர் பாக்யராஜ் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும்போது, உதவி இயக்குனரான பாண்டியராஜனும் தன் பங்குக்கு படுத்துவாராம், அப்டி போங்க இப்டி வாங்க இங்க நில்லுங்க என இது போல பாண்டியராஜன் மிரட்டலாக சொல்வது ராதிகாவுக்கு பிடிக்காதாம்.

இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு சின்ன பூவை தலையில் வைத்தால் கூட பாண்டியராஜனை இயக்குனரிடம் மாட்டிவிடவேண்டுமென்று இந்த பூ சரியா தலையில் இருக்குதான்னு பாக்யராஜிடம் கேட்பாராம் ராதிகா, இதனால் ஷூட்டிங் பரபரப்பில் இருக்கும் பாக்யராஜ், என்னய்யா பார்த்த சரியா பாருய்யா என பாண்டியராஜனை கத்துவாராம், இதை ஜாலியான ஒரு விசயமாக ஒரு மேடையில் ஜாலியாக தனது மலரும் நினைவுகளாக பேசி இருந்ததை கேட்க முடிந்தது.

  • 54