நடிகர் ரஜினிகாந்த் தனது 1 வார கால ஆன்மிக சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார். மிகவும் எளிய தோற்றத்துடன் தேக்குமர இலை தட்டில் அவர் சிற்றுண்டி அருந்தும் ஃபோட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
கூலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அவர் ஒரு வார காலத்திற்கு ஆன்மிக சுற்றுப் பயணத்தை தொடங்கியிருக்கிறார்.
தற்போது ரஜினிகாந்த் சம்பந்தப்படாத காட்சிகளை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் படமாக்கி வருகிறார். இந்நிலையில் ஆன்மிக சுற்று பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு உத்ரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷிற்கு சென்றடைந்தார்.