Feed Item
·
Added a news

கனடா ராணுவம் மாணவர் படை எனப்படும் கேடட் பயிற்சியின் பெரும்பாலான வார இறுதி நடவடிக்கைகளையும் போட்டிகளையும் மார்ச் மாதம் வரை நிறுத்தியுள்ளது. ஒன்டாரியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களில் உள்ள கேடட் பிரிவுகளில் இந்தக் கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. நடப்பு நிதியாண்டு முடியும் மார்ச் முப்பத்து ஒன்றாம் தேதி வரை இது நீடிக்கும்.

பாதுகாப்பு அமைச்சகம் செலவுகளைச் சமாளிக்கச் சிரமப்படுவதாக உள் மின்னஞ்சல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த முடிவால் ஆயிரக்கணக்கான இளம் மாணவர்களின் பயிற்சி, முகாம், போட்டி அனுபவங்கள் பாதிக்கப்படும் என்று பெற்றோரும் பயிற்றுநர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

  • 137