நாடெங்கும் ஒளவையின் புகழ் கூடியது!
ஔவையை கம்பர் ஒரு முறை சீண்டிப் பார்த்தார்!
அரண்மனையில் வீற்றிருந்தபோது வெளியே கீரைக்காரியின்
சப்தம்!
புலவர்கள் ஒருவரையொருவர் வணிகர்கள் தங்கத்தை உரசிப்
பார்த்து தரம் (மாற்று) கண்டுபிடிப்பது போல் உரசுவது வழக்கம்.
வாயைக் கொடுத்து விட்டு வாங்கிக் கட்டுவதும் உண்டு.
புதிர் போடுவது போல் ஒளவையாரிடம் விடுகதையாகக்
கம்பர் கூறியது:
ஒரு காலடி! நான்கிலைப் பந்தலடி!
என்பதுதான்.
–
ஒளவையாரை உலகமே போற்றுகிறது! ஆனால் அடி! அடி! என
அடியே! என்பது போலக் கேட்டுவிட்ட மகிழ்ச்சி அது.
–
“விட்டேனா பார்’ என ஒளவை பாடிய பதில் வெண்பா!
ஓட ஓட விரட்டியது போன்ற பாடல். துண்டைக்காணோம்
துணியைக் காணோம் என்று புதிர் போட்டதும் போதும்
வாயைக் கொடுத்ததும் வாங்கிக் கட்டியதும் போதும் என
உணர வைத்த பாடல் இதுதான்
–
எட்டேகால் லட்சணமே! எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே! முட்டமேற்
கூரையில்லா வீடே! குலராமன் தூதுவனே!
ஆரையடா சொன்னாய் அடா!
–
தமிழில் “அ’ என்றால் எட்டு! கால் என்பது “வ’ எட்டேகால் என்பது
“அவ’ + லட்சணமே – அவலட்சணமே! என்பது முதல் சடார் அடி.
எமன் ஏறிச் செல்லும் (பரி = குதிரை) எருமைமாடே!
அடுத்தது பளார் அடி! மட்டில் பெரியம்மை
வாகனமே = எல்லோரையும் மட்டமாக்கும் மூதேவி! வாகனம்
கழுதையே.
முட்ட மேற்கூரையில்லா வீடே! மேற்கூரை இல்லாத வீடே! அடேய்
குட்டிச் சுவரே! மேலும் ஒரு செம அடி. குலராமன் தூதுவனே!
அனுமான் குலக் குரங்கே! ஓட ஓட விரட்டிய பலத்த அடி. ஆரைக்
கீரை ஒற்றைத் தண்டில் நிற்கும்!
மேலே பந்தல் போட்டது போல், நான்கு இலைகள்
கொண்டிருக்குமல்லவா? ஒளவையார்க்கு அது தெரியாதா?
தெரியும்!
திட்டினாலும் தித்திக்கும் பாடல் பிறந்தது இன்பம்
அல்லவா?
 
    
    
    
    
    
 
            
            
        
 Home
                Home
            