இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். உயர் அதிகாரிகள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். நீண்ட நாள் முதலீடு தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். மறைமுக வருமானங்களில் கவனம் வேண்டும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளால் குழப்பங்கள் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
ரிஷபம்
பயணம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். ஆரோக்கிய பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பழைய வாகனங்களை மாற்றுவீர்கள். திறமைக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். சாந்தம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம்
வருவாயிலிருந்து நெருக்கடிகள் மறையும். உறவுகளிடம் கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இழுபறியான சில சரக்குகளால் ஆதாயம் அடைவீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
குடும்பத்தின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். பிற மொழி மக்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வேலையாட்களிடத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். பணி நிமித்தமான புதிய பொறுப்புகள் கிடைக்கும். புது விதமான கனவுகள் பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
சிம்மம்
உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் பிறக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கடன் தொடர்பான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில உதவிகளால் ஆதரவுகள் மேம்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஊதா
கன்னி
திட்டமிட்ட பணிகளில் உள்ள தடைகளை வெற்றி கொள்வீர்கள். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்த தன்மை குறையும். உணவு விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும். உறவுகள் மூலம் ஒத்துழைப்பு ஏற்படும். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
துலாம்
தன நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். தாயாருடன் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். கலைப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உயர் கல்வி குறித்த குழப்பம் விலகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தினை ஏற்படுத்தும். பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். சாதனை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
செயல்பாடுகளில் ஒரு விதமான மந்தத் தன்மை வெளிப்படும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். முன்யோசனை இன்றி செயல்படுவதை குறைத்து கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான செயல் திட்டம் பிறக்கும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வியாபார விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். வரவுகளில் சிறுசிறு போராட்டங்கள் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கருத்துக்களை சூழ்நிலை அறிந்து வெளிப்படுத்தவும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனைகள் வந்து நீங்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
மகரம்
விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்து பணிகளை முடிப்பீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பம் பற்றிய கவலைகள் தோன்றி மறையும். பிற மொழி பேசும் மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்களால் சில தெளிவுகள் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
கலை சார்ந்த பணிகளில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உங்கள் கருத்துக்களுக்குண்டான மதிப்புகள் கிடைக்கும். அரசு பணிகளில் இருந்த தடைகள் குறையும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். அரசு பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். சமூக பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். புதிய மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்