பல ஆண்டுகளுக்கு முன் டாடா நிறுவனம் தங்கள் நிறுவனம் சார்ந்த ஒரு வேலை வாய்ப்பு விளம்பரத்தை நாளிதழ்களில் தந்தது.
அதில் அந்த வேலைக்குத் தேவையான தகுதிகளை பட்டியலிட்டு விளம்பரத்தின் இறுதியில் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும் என்றும் அறிவித்து இருந்தது.அந்த விளம்பரத்தைப் பார்த்த பொறியாளரான ஒரு பெண்,அதில் குறிப்பிடப்பட்ட அத்தனை தகுதிகளும் தனக்கு இருப்பதாக,அந்த வேலைக்கு விண்ணப்பித்தார்.ஆனால் பெண் என்பதை காரணம் காட்டி,அவருக்கு அந்த வேலையை டாடா நிறுவனம் தரவில்லை.
அதற்காக அந்தப் பெண் விட்டுவிடவில்லை.
"வேலையை செய்ய திறமையும்,அறிவும் தான் தேவை.இதில் ஆண்-பெண் பேதம் என்ன?" என்று விளக்கம் கேட்டு ஒரு கடிதத்தை டாடா நிறுவன உரிமையாளர் ஜே.ஆர்.டி.டாடா வுக்கே எழுதினார்.
அந்தக் கடிததத்தைப் படித்து பார்த்து பெரியவர் ஜே.ஆர்.டி.டாடா உடனே தன் நிறுவன மேலாளர்களை அழைத்து,"இந்தப் பணியை செய்ய,ஆண்-பெண் என்ற வித்தியாசத்தைக் கடந்து,நாம் எதிர்பார்க்கும் தகுதிகள் இந்தப் பெண்ணுக்கு இருக்கிறதா?" எனக் கேட்டார்.
மேலாளர்கள் ஆம் என்று சொல்ல,
அந்த நொடியிலேயே,அந்த பெண்ணுக்கு அவர் விண்ணப்பித்த வேலை கிடைத்தது.
டாடா குழுமத்தின் முதல் பெண் பொறியாளர் என்ற வரலாற்றுப் பெருமையும் ஏற்பட்டது.
அதோடு சேர்த்து இனி டாடா நிறுவனத்தின் எந்த பணிக்கும் ஆண்-பெண் பேதம் இருக்காது,திறமையும் தகுதிகளும் மட்டும் தான் தேவை என்ற உத்திரவும் பறந்தது.
டாடா நிறுவனத்தின் கொள்கையையே தன் திறமையால் உடைத்துக் காட்டிய அந்த பெண் தான் #திருமதி.சுதா நாராயணமூர்த்தி.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் துவக்கிய என்.ஆர்.நாராயணமூர்த்தியின் மனைவி.
இன்னும் சொல்லப் போனால் இன்ஃபோசிஸ் நிறுவனமே கூட சுதா நாராயணமூர்த்தியால் தான் உருவானது.