இந்தப் படத்தில் இருக்கும் கொஞ்சம் குழப்பமாகவும், துயரமாகவும், எதிர்பாராத தோற்றத்துடனும் இருக்கும் இந்திய இளைஞன், ஜெர்மனியில் மெட்ரோ ரயிலில் உட்கார்ந்திருக்கிறான். அவன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பெண்ணை அவனுக்குத் தெரியாது. ஆனால் அவள் யாரென்றால்… உலகப் பிரபலமான நடிகை!
இந்தப் படம் ஜெர்மனி முழுவதும் ஒரே நாளில் வைரலாகிறது.
பிரபல ஜெர்மன் பத்திரிகையான “டெர் ஸ்பீகல்” (Der Spiegel) அந்தப் படத்தில் இருக்கும் இந்திய இளைஞனைத் தேட ஆரம்பிக்கிறது. இறுதியில் மியூனிக்கில் அவனைக் கண்டுபிடிக்கிறார்கள். அப்போதுதான் தெரிகிறது… அவன் ஜெர்மனியில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கிறான் என்பது.
நிருபர் அவனிடம் கேட்கிறார்:
“உனக்குத் தெரியுமா, உன்னருகில் உட்கார்ந்திருந்த வெள்ளைப் பெண் ‘மேசி வில்லியம்ஸ்’ — ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரிஸின் நாயகி (Arya stark) என்பது? அவளுக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்காங்க. கூட ஒரு செல்ஃபி எடுக்கக் கனவு காண்பாங்க. ஆனால் நீ எந்த ரியாக்ஷனும் காட்டல… ஏன்?”
அமைதியாக அந்த இளைஞன் பதில் சொல்கிறான்:
“எனக்கு தங்கும் அனுமதி இல்லை… பையில் ஒரு யூரோ கூட இல்லை… தினமும் ‘சட்டவிரோதமாக’ டிக்கெட் இல்லாம ட்ரெயினில் பயணம் செய்யுறேன்… அப்படி இருக்கும்போது எனக்கு பக்கத்தில் யார் உட்கார்ந்திருக்காங்கறது எனக்கு முக்கியமே இல்லை.”
அவன் நேர்மையும், நிலைமையும் பத்திரிகையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துது. உடனே அந்தப் பத்திரிகை அவனுக்கு தபால்காரர் வேலை ஒன்றை ஏற்பாடு செய்கிறது. மாத சம்பளம் 800 யூரோ. இந்த வேலை ஒப்பந்தம் இருப்பதால், உடனடியாக அவனுக்கு சட்டப்படியான தங்கும் அனுமதி கிடைத்துவிடுகிறது. எந்தத் தடையும் இல்லாமல்.
இந்தக் கதை நமக்குச் சொல்வது… விதி எப்படி வேலை செய்கிறது என்பதை.
ஒவ்வோர் சம்பவமும் முந்தைய சம்பவத்துடன் தொடர்புடையது. இப்போதைய சம்பவம் எதிர்கால சம்பவத்துடன் இணைக்கப்பட்டிருக்கு. எல்லாமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டது போல… ஒரு ஸ்கிரிப்ட் எழுதப்பட்டிருக்கு, அதன் மேல்தான் வாழ்க்கை என்ற படம் ஓடிக்கொண்டிருக்கு.
அடுத்து யாருடைய விதியில் என்ன எழுதப்பட்டிருக்குன்னு யாருக்கும் தெரியாது.
இதுதான் விதியின் விளையாட்டு. 🙏
உங்களுக்கும் விதியின் மேல் நம்பிக்கை இருந்தால் இதே மாதிரி இணையத்துல கிடைக்கற படத்தை எடுத்து இஷ்டத்துக்கு கதை எழுதுங்க. நம்பறவங்க நிறைய பேர் இருக்காங்க.