Feed Item
·
Added a news

கனடாவின் ஒட்டாவாவில் இடம்பெற்ற கத்தி குத்திக்கொலைச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரைடியு நிலைய வணிக வளாகத்துக்கு அருகில் இந்த சம்பவம் நடைபெற்றதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலைப்பிரிவு விசாரணையை முன்னெடுத்து வருகிறது. காயமடைந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவித அச்சமும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாண்டின் நான்காவது கொலைச் சம்பவமாக இது பதிவாகியுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் Rideau Centre அருகே இடம்பெற்ற இரண்டாவது கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவமாகவும் இது குறிப்பிடப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அதே பகுதியில் மேலும் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி காயமடைந்திருந்தார்.

  • 49