1) பொது இடங்களிலும், அவர்களின் சொந்த வீட்டிலும், டாய்லெட் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது ரொம்ப பேருக்கு தெரியல.
2) சாப்பிட்ட தட்டை அதில் மீதம் இருக்கும் கழிவுகளை அப்புறப்படுத்திய பிறகே.. அதை சுத்தப்படுத்துகிற இடத்தில் சேர்க்க வேண்டும் என்பது ரொம்ப பேருக்கு தெரியல.
3) பிரயாணங்களின் போது -அரசு பேருந்துகள் ரயில் போக்குவரத்து போன்றவைகளில் ஒருவரை ஒருவர் உரசிக்கொண்டு அமராமல் நாகரிகமாக-(ஓரளவுக்கு) அனுசரித்து அமர்வது பயணம் செய்வது என்பது யாருக்கும் தெரியல.
4) ஒருவரிடம் பேசும் போது நாம் பேசுகிற வார்த்தைகளுக்கு பதில் அளிக்க எதிரில் இருப்பவருக்கு எப்படி வாய்ப்பு கொடுப்பது என்பது தெரியல.
5) பொதுவெளியில்.. சிலரிடம் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்வது, சிலரிடம் அசடுகள் போல முகத்தை வைத்துக் கொள்வது+ நடந்து கொள்வது, எந்தவித காரணமும் இன்றி-நாம் ஏன் இப்படி இருக்க வேண்டும்? என்பது தெரியல.
6) நம்மை ஒருவர் தேடி வரும் போது கெத்தாகவும்.. நாம் ஒருவரை தேடிச் செல்லும் போது.. அக்கறையுடனோ, நாகரீகத்துடனோ, "இருப்பது போல"-பொய்யான பாவனை ஏன்? என்பது தெரியல.
7) நம்மை அண்டியும் அனுசரித்தும் இருப்பவர்களை மதிப்பதில்லை. ஆனால் சம்பந்தமில்லாதவர்களுக்கு.. ஊளை கும்பிடு.. ஏன்? என்பது தெரியல.
8) முகத்தில் மூக்கு என்பது எப்படி நிரந்தர இடத்தை பிடித்து இருக்கிறதோ.. அதைப்போல உதடுகளில் சிரிப்பு என்பதும்.. நிரந்தரமாக இருக்கட்டும்…என்பதும்.. ஏன்? ரொம்ப பேருக்கு தெரியல.