இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். தவறிய முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். செலவுகளில் தன்மைகளை அறிந்து செய்லபடவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
ரிஷபம்
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் ஒருவிதமான தாமதம் உண்டாகும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளி உணவுகளை குறைத்து கொள்ளவும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். உயிர் அதிகாரிகளிடம் வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் நிலவும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் நீங்கும். துணைவர் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் மறையும். சுபகாரிய முயற்சிகள் வெற்றிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம்
நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வர்த்தகம் செயல்களில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். தந்தை வழியில் இருந்த வேறுபாடுகள் மறையும். நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் ஏற்படும். புது வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் கிடைக்கும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கன்னி
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நிலவும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தன வரவுகள் சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். இலக்கிய பணிகளில் தனிப்பட்ட ஈர்ப்பு உண்டாகும். அனாவசிய செலவுகளை குறைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். ஆசை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
உத்தியோக பணிகளிலிருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். உறவினர் வழியில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழ்நிலைகள் உருவாகும். கட்டுமான பணிகளில் அலைச்சல் ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்வீர்கள். இனம்புரியாத சிந்தனைகள் மூலம் அவ்வப்போது தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். கால்நடை தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். வாழ்வு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விருச்சிகம்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப காரிய முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். உடன் பணிபுரிபவர்களால் ஆதாயம் அடைவீர்கள். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
தனுசு
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். ரகசியமான செயல்பாடுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். நீண்ட நேரம் கண் முழிப்பதை குறைத்துக் கொள்ளவும். உணவு சார்ந்த துறைகளில் லாபங்கள் மேம்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மகரம்
குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். புதுமையான செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகள் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
வாக்கு சாதுரியம் மூலம் தடைப்பட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். புதுவித பயணங்கள் மூலம் மனதில் தெளிவுகள் ஏற்படும். மனதிற்க்கு பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மீனம்
வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். சமூக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கலைப்பணிகளில் சில நுட்பங்களை அறிவீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்