ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இதில் எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்துக்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தின் டைட்டில் டீஸர் வரவேற்பைப் பெற்றுவருகிறது. “சென்டிமென்ட் கலந்த ஆக் ஷன் திரைப்படம் இது. விக்ரமின் வழக்கமான மாஸ் அம்சங்களுடன், குடும்ப பார்வையாளர்களைக் கவரும் உணர்வுப்பூர்வமான கதை, பரபரப்பான த்ரில்லர் திரைக்கதை மற்றும் ஆக் ஷன் காட்சிகள் இணைந்த படமாக இது இருக்கும்” என படக்குழு கூறியுள்ளது.
