பாப் பாடகியும் நடிகையுமான டெய்லர் ஸ்விப்ட் டாய் ஸ்டோரி 5 படத்திற்காக பாடல் எழுதியது குறித்து பேசியுள்ளார். வேறு ஒரு கலைஞரின் வாய்ப்பை தட்டிப் பறிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
நவம்பர் 1 அன்று நியூயார்க்கில் நடந்த சிறப்பு திரையிடலில் இயக்குனர் ஆண்ட்ரூ ஸ்டாண்டனுடன் பேசிய போது இதனை தெரிவித்தார். "ஐ நியூ இட், ஐ நியூ யூ" என்ற பாடலை அவர் உருவாக்கியுள்ளார்.
36 வயதான டெய்லர் ஹாட் 100-ல் 50 வாரங்களுக்கு மேல் முதலிடத்தில் இருந்த 4-வது பெண் என்ற சாதனையும் படைத்துள்ளார். கவர்ச்சி மற்றும் திறமை கலந்த டெய்லரின் இந்த பாடல் ஏற்கனவே ஸ்ட்ரீமிங் சாதனை படைத்துள்ளது.
