முகநூலில் கூட மூதாளர்களை
உதறிப் போகிறது உலகம்
அவர்களின் ஏக்கம் அன்பின் தேடுதல்
என்று உணராமல்…..!
மூதாளர்களை கொண்டாடுங்கள்
அவர்களுக்கு பொன் பொருள் கொடுக்க வேண்டாம்
நலமா நீங்க என்ற ஒற்றை சொல் போதும்
அத்தனை நோய்க்கும் அது
ஒன்றே மருத்துவம் பார்க்கும்
கடவுளின் பார்வை உங்களை நோக்கும்