Feed Item
·
Added article

விஜய் சேதுபதி நடிப்பில் அக்டோபர் 1 அன்று திரையரங்குகளில் வெளியான பத்தா திரைப்படம் நேற்று அக்டோபர் 29 முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி பத்தவச்சலம் என்ற கேங்ஸ்டர் வேடத்தில் நடித்துள்ளார். ஒரு பள்ளி மாணவனால் அவர் சிக்கிக்கொள்வது தான் கதை.

இந்தப் படம் திரையரங்குகளில் கலவையான வரவேற்பை பெற்றாலும், ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. லிஜோமோல் ஜோஸ் அவரது மனைவியாக நடித்துள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திற்கு பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. தமிழ் உட்பட 5 மொழிகளில் இந்தப் படம் ஓடிடியில் கிடைக்கிறது.

  • 139