கம்பர் ஒரு முறை சோழ மன்னனைப் புத்தியில்லதாவன் என்று சொல்லியதாக சில புலவர்கள் மன்னரிடம் புகார் தெரிவித்தனர். மன்னன் கடும் கோபம் கொண்டான். உடனே கம்பரைக் கூப்பிட்டு விசாரித்தார்.
அப்போது கம்பர்
"புத்தியில்லாதாவர் என்று சொன்னது உண்மைதான். ஏன் மதியில்லாதவர் என்று கூட சொல்லுவேன்" என்றாராம். உண்மையைக் கூற கம்பன் அஞ்சமாட்டான் என்றும் கூறி சிரித்தார்.
மன்னனின் முகம் கடும் சினத்தால் சிவந்தது. உடனே கம்பர் "மன்னர் புத்தியில் ஆதவர். அதாவது அறிவில் சூரியன், அதுபோல மதியிலும் ஆதவர் " என்று விளக்கமளித்தார் கம்பர்.