Feed Item
·
Added a news

பிரேசிலில் ஐ.நா காலநிலை உச்சிமாநாடு நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டு அரங்கில் நேற்று (20) இரவு திடீரென தீ பரவியதில், தீயில் சிக்கி 13 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரங்கில் தீ பரவியதும், மாநாட்டில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஓட்டமெடுத்துள்ளனர். எனினும், இந்த அசம்பாவைதத்தில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா காலநிலை உச்சி மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு, திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கிளம்பிய புகையை சுவாசித்த 13 பேருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பிரேசிலின் பெலெமில் உள்ள COP30 அரங்கில் கடந்த திங்கட்கிழமை 10ஆம் திகதி தொடங்கிய இந்த உச்சிமாநாடு, இன்றோடு (21) நிறைவடைகின்றது.

  • 68