☕ ஒரு கப் டீ… 10 நிமிஷ தாமதம்… 28 உயிர்கள்!
சில நேரங்களில் வாழ்க்கையில் ஏற்படும் தாமதம் கூட ஒரு ஆசீர்வாதமாக இருக்கலாம்!
நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் உள்ள சியாப்ருபேசி நோக்கி 28 இந்தியப் பயணிகள் பயணம் செய்துகொண்டிருந்தார்கள்.
திட்டப்படி அவர்கள் அதிகாலையிலேயே அங்கு சென்றிருக்க வேண்டும்.
ஆனால் வழியில்…
☕ “ஒரு டீ குடிச்சிட்டு போகலாம்…”
என்று வண்டியை நிறுத்தியிருக்கிறார்கள்.
வெறும் 10 நிமிட டீ பிரேக்!
அந்த நேரத்தில் யாருக்கும் தெரியாது…
அந்த 10 நிமிடங்கள் தான் 28 பேரின் உயிரையும் காப்பாற்றப் போகிறது என்று!
அவர்கள் மீண்டும் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவே, செல்ல வேண்டிய பாதையில் திடீரென பயங்கரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஒருவேளை…
அந்த டீ பிரேக் இல்லாமல்,
திட்டமிட்ட நேரத்திலேயே அவர்கள் சென்றிருந்தால்…?
என்ன நடந்திருக்கும் என்று நினைத்தாலே பதறுகிறது!
நிலைமையை உணர்ந்த டிரைவர் உடனடியாக சுதாரித்துக்கொண்டு, வண்டியை மாற்றுப் பாதையில் திருப்பி, அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். 🙏
இந்த சம்பவம் குறித்து சைன் இன் டிராவல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பெம்மசானி வெங்கடரமணா தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
☕ அன்று அது வெறும் ஒரு கப் டீ அல்ல…
28 பேருக்கு கிடைத்த இன்னொரு வாய்ப்பு!
வாழ்க்கை விசித்திரமானது…
நமக்கு “ஏன் இந்த தாமதம்?” என்று தோன்றும் சில நிமிடங்கள் கூட,
ஒருநாள்…
“நல்லவேளை தாமதமானோம்!” என்று சொல்ல வைக்கலாம்.