- 8 மணி நேரம் தூங்க வேண்டும் 10 மணி நேரம் தூங்க வேண்டும் என்று 8 மணிக்கே படுக்கைக்கு போய் விடாதீர்கள். தூக்கம் வரும் வரை ஏதேனும் வேலை செய்துகொண்டோ குறைந்த பட்சம் படித்துக்கொண்டோ இருங்கள். நோ டி.வி. நோ மொபைல்.
- கண்கள் கெஞ்சும் வரை காத்திருங்கள்.
- படுக்கைக்குப் போகும் முன் வெது வெதுப்பான நீரில் குளிக்கலாம்.
- அல்லது கால்களையாவது ஒரு 10 நிமிடம் வெது வெதுப்பான நீரில் வைத்திருங்கள்.
- அரை டம்ளர் சூடான பால் குடிக்கலாம். முடிந்தால் அதில் கொஞ்சம் தேன் சேர்த்துக் கொள்ளலாம். முடிந்தால் கொஞ்சம் மஞ்சள் தூளும் மிளகுத் தூளும் சேர்த்துக் கொள்ளலாம். முடிந்தால் கொஞ்சம் பூண்டு, பேரீச்சம் பழம் சேர்த்துக் கொள்ளலாம். சத்துக்கு சத்தும் ஆச்சு கபத்துக்கு மருந்தும் ஆச்சு.
- தலையணைக்கடியில் கொஞ்சம் மல்லிகைப் பூக்களை வைத்துக் கொள்ளலாம். மல்லிகை மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்டது. மனச் சோர்வுக்கும் மருந்தாகும் ; தூக்கத்திற்கும் துணையாகும்.
- மெல்லிய (வார்தைகளற்ற) இசையை கேட்கலாம். Preferably Flute.
- இறுதியாக - முக்கியமாக - தூக்கம் வரவில்லையே என்று கவலைப் படுவதை உடனடியாக நிறுத்துங்கள். வராவிட்டால் போகட்டும். உடலுக்குத் தேவையான தூக்கத்தை அது எடுத்துக் கொள்ளும் - மூச்சு விடுவதைப் போல. என்றாவது சரியாக மூச்சு விட்டோமா என்று கவலைப்பட்டிருக்கிறீர்களா ? அது போலத்தான். நீங்கள் செய்த / செய்கிற வேலைக்கேற்பதான் தூக்கம் வரும். அது நீங்கள் சாப்பிடும் உணவைப் பொருத்தும் அமையும். So wait. வெறுமனே காத்திருங்கள்.