Feed Item
·
Added a news

ஆல்பர்டா மாகாணத்தில் வரும் அக்டோபர் 19 அன்று, கனடாவில் இருந்து பிரியும் செயல்முறையைத் தொடங்குவதா என்பது குறித்த வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. எண்ணெய் வளம் மிக்க இந்த மாகாணம், ஒட்டாவாவின் சுற்றுச்சூழல் கொள்கைகள் தங்கள் வளர்ச்சியைத் தடுப்பதாக நீண்ட காலமாகக் குற்றம் சாட்டி வருகிறது.

கனடா பிரதமர் மார்க் கார்னி இந்த வாக்கெடுப்பை “ஆபத்தான புளூஃப்” (dangerous bluff) என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இதை பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பிரெக்சிட் வாக்கெடுப்புடன் ஒப்பிட்டுள்ளார். கடந்த வாரம் எலான் மஸ்க் கியூபெக், ஆல்பர்டா பிரிய வேண்டும் என கூறியதற்கு, “கனடாவின் எதிர்காலத்தை கனடியர்களே முடிவு செய்வார்கள்” என கார்னி பதிலடி கொடுத்தார்

இந்த வாக்கெடுப்பின் இறுதி வாரத்தில் பிரதமர் ஆல்பர்டாவில் தங்கி பிரச்சாரம் செய்யவுள்ளதாக CBC News தெரிவித்துள்ளது. இது கனடா ஒற்றுமைக்கு மிகப்பெரிய சோதனையாக பார்க்கப்படுகிறது

  • 80